இறைவனை சிந்திக்காதவர்கள்

இறைவனை சிந்திக்காதவர்கள் இன்னும் அவர்கள் (சிந்தித்து) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில்(பல்வேறு) விளக்கங்களைகூறியுள்ளோம். (அல்குர்ஆன் 17:41)

Wednesday, March 23, 2011

இளைஞர்களின் கணவு படிப்பு – MBA என்றால் என்ன ??

ஸலாமுன் அழைக்க ...


இன்றைக்கு பொறியியல் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி கலை, வணிகவியல் மற்றும் அறிவியல் சார்ந்த மாணவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் அடுத்து தேர்ந்தேடுக்க விரும்பும் கணவு மேற்படிப்பு Master Of Bussiness Administration (MBA) என்பதாகும்.


இதற்க்கு சாண்றாக தமிழகத்தில் வளர்ந்து வரும் MBA படிப்புகளுக்கான கல்வி நிறுவணங்கள் உள்ளது. மருத்துவர் , என்சினியர் வழக்கறிஞர் என்ற வரிசையில் ஏன் அதற்க்கும் மேலாக மதிப்பும் மரியாதையும் கொண்ட துறையாக இது வளர்ச்சி பெற்று இருக்கின்றது
.


உங்களிடம் MBA படிக்கும் ஆசை இருந்தால் அதை நினைவாக்கும் வகையில் அந்த படிப்பை பற்றி உங்களுக்கு விளங்க செய்வதே இதன் நோக்கம்.

உங்கள் ஊரில் அப்துல் காதர் என்பவர் ஒரு சாதாரன உணவகம் வைத்து நடத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அந்த கடையில் அன்றாடம் என்ன நடக்கின்றது என்று பார்த்தாலே போதும் MBA என்றால் என்ன என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

அந்த கடையை கவணிக்கும் நபர் அதிகாலையில் உணவகத்திற்க்காக பால் பூத்தில் பால் வாங்குகிறார் பிறகு மளிகை கடைக்கு சென்று டீ தூள் சர்க்கரை உணவு செய்வதற்க்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்கி வருகிறார். நாள் முழுவதும் வியாபாரம் நடக்கின்றது. இரவு உணவகத்தை மூடும் முன் அவர் வரவு செலவு கணக்கு பார்க்கிறார்.

அப்துல் காதர் எதற்க்காக இந்த உணவகத்தை வைத்து வியாபாரம் செய்கிறார் ? பால், டீ தூள் மற்றும் உணவகத்திற்க்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க, கடையில் உள்ளவர்களுக்கு சம்பளம் கொடுக்க மற்றும் அவரின் செலவுக்காக இந்த வியாபாரத்தை செய்கிறார். இந்த செலவுகள் எல்லாவற்றிக்கும் அதிகம் பணம் தேவை. அவர் உழைப்பது இந்த லாபத்துக்காக தான்.

இது தான் பிசினஸ், அதாவது வியாபாரம். இதை தவிர்த்து பல வியாபாரங்களும் உள்ளன. சோப்பு , சீப்பு, மளிகை சாமாணகள் காய்கறி, பழம், செல்போன், டி.வி, பிரிஜ், ஏர்கண்டிசனர், லேப்டாப் கம்பியூட்டர், மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் என்று பல கடைகளில் விற்க்கபடுகின்றது. இதுவும் வியாபாரம் தான்.

இது மட்டும் தான் வியாபாரமா ?? இல்லை இல்லை. உதாரணமாக நீங்கள் படிக்கும் கல்வி கூடங்களை எடுத்துக் கொள்ளலாம். இங்கேயும் பணம் கொடுக்கிறீர்கள். என்ன பொருள் வாங்குகிறீர்கள் ?? படிப்பு, அறிவு இது ஒரு பொருள் இல்லையே ?

அதே போல் நாம் மருத்துவமனைக்கு செல்கின்றோம் அங்கு நமக்கு மருத்துவர்களால் மருத்துவம் செய்யப்படுகின்றது. அதற்க்காக நாம் மருத்துவரிடம் பணம் கொடுக்கின்றோம்.

மருத்துவமனையாக இருந்தாலும் கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் இங்கே விற்க்கபடுவது என்ன ?? ஒரு பொருளை இல்லை ஆனால் ஒரு சேவையை.

ஆம் வியாபாரம் என்பது லாபம் இட்டும் நோக்கத்தில் பொருளையோ அல்லது சேவையையோ விற்ப்பது.

பிசினஸ் மேனெஜ்மெண்ட் என்றால் என்ன ? வியாபார நிர்வாகம். ஒரு நிர்வாகத்தின் பல செயல்களையும் ஒருங்கிணைந்து லாபம் ஈட்டுவது தான் பிசினஸ் மேனெஜ்மெண்ட் என்பதாகும்.

வியாபார நிர்வாகத்தில் அப்படி என்ன தான் இருக்கின்றன ? இப்போது அப்துல் காதர் செய்யும் வியாபாரத்தை பார்ப்போம்.

உணவு செய்வதற்க்கு டீ தூள், பால், அரிசி, எண்ணை, சமயல் எரிவாயு மற்றும் மளிகை பொருட்கள் எவ்வளவு இருக்கிறது என்று கணக்குப் போடுகிறாரே அது தான் Inventory Control.

அவற்றை அனைத்தையும் வாங்குவது தான் பர்ச்சேஸ் மேனெஜ்மெண்ட்(Purchase Management).

உணவுகள் தயாரிப்பது புரொடக் ஷன்(Production)

வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் தரமாண உணவு தயாரித்து வாடிக்கையாளர்களை திருப்திபடுதுவது விற்ப்பனை.(Marketing)

அப்துல் காதர் உணவகம் என்று போர்டு வைத்திருக்கிறாரே அது விளம்பரம்.(Advertising)

கடையில் அமர்ந்து கல்லாவை நிர்வகிப்பது, வரவு செலவுக் கணக்குப் பார்ப்பது நிதி நிர்வாகம்.(Finance Management)

கடையில் வேலை செய்யும் வேலையாட்கள் ஒழுங்காக வேலை செய்கின்றார்களா என்று அப்துல் காதர் கவனிக்கின்றார்களே இது ஊழியர் நிர்வாகம்.(Personnel Management)

வேலை செய்வதற்க்கு எத்தனை ஆட்கள் தேவை என்று கணக்கு போடுவது தான் மனித வள நிர்வாகம்.(Human Resource Management)

அத்தனை வேலைகளும் சரியாக நடந்து கொண்டு இருக்கிறதா என்று அப்துல் காதர் கவணித்துக் கொண்டு இருக்கிறாரே அது தான் பொது நிர்வாகம்.(Genaral Management)

இவை அனைத்தையும் ஒருங்கினைந்து லாபம் வர வைக்கிறாரே. இது தான் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன். அதை பற்றி மிகவும் விரிவாக படிப்பது தான் MBA என்று கூறப்படும் Master of Bussiness Administration.

நாம் இங்கு உங்களுக்கு கூறி இருப்பது சாதாரன ஒரு உணவகத்தில் நடக்கும் வியாபாரத்தை பற்றி. இதே போல் ஒரு பண்னாட்டு நிறுவனத்தை எடுத்துக் கொண்டால் இந்த உணவகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் பெரிய அளவில் நடக்கும்.

ஒரு நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்த நினைத்தால் நிர்வாகத்தின் எல்லா நடவடிக்கைகளையும் பற்றிய ஆழ்ந்த அறிவு வேண்டும். அதாவது.

  • ·         ஊழியர் நிர்வாகம்(Personnel Management)
  • ·         விற்பனை நிர்வாகம்(Marketing Management)
  • ·         மனித வள நிர்வாகம்(Human Resource Management)
  • ·         உற்ப்பத்தி நிர்வாகம்(Production Management)
  • ·         நிதி நிர்வாகம்(Finance Management)
  •    கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு நிர்வாகம்(Computer & Information Systems Management)

இவை அனைத்தையும் ஒருங்கினைந்து படிப்பது தான் MBA. இதை தாம் MBA வில் கற்றுக் கொடுக்கின்றார்கள்.

இவை அனைத்தும் MBA வை பொருத்தவரை ஒரு ஒரு கடல் இதை மேலோட்டமாக தான் நாம் இங்கு பார்த்து இருக்கின்றோம். MBA வில் உள்ள பல துறைகளான Human Resource Management, Supply Chain Management, Financial Management, Logistics & Shipping Management, Import & Export Management, Hotel Management, Airport Management etc போண்றவைகளில் மிகவும் விரிவாக இந்த 6 நிர்வாகத்தை பற்றி தான் படிக்க வேண்டும்.

சுறுக்கமாக சொல்ல போணால் இது தான் MBA என்று சொல்லப்படும் Master of Business Administration.

பரங்கிப்பேட்டை T.H.கலீல்லூர் ரஹ்மான்.,MBA(TNTJ மாணவர் அணி)