இறைவனை சிந்திக்காதவர்கள்

இறைவனை சிந்திக்காதவர்கள் இன்னும் அவர்கள் (சிந்தித்து) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில்(பல்வேறு) விளக்கங்களைகூறியுள்ளோம். (அல்குர்ஆன் 17:41)

Monday, January 31, 2011

இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்



               தவ்ஹீத் என்ற வார்த்தையையும் தவ்ஹீதின் கோட்பாட்டை எத்திவைப்பவர்களுடைய பேச்சையும் கேட்டாலே போதும் முஸ்லிம்களில் இணைவைப்பாளர்களுக்கு மத்தியில் ஒருவிதமான கோபம் உருவாவதை தெளிவாக உணரலாம்.
பெரும்பாண்மையான இணைவைப்பாளர்கள் தவ்ஹீதை எவ்வாறு உணர்ந்துள்ளார்கள்? தவ்ஹீத் தரும் படிப்பினையை எத்திவைப்பவர்கள் மீது இவர்களுக்கு ஏன் கடுங்கோபம் ஏற்படுகிறது என்பதை உணர்ந்துக் கொண்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்)! வாருங்கள் இதுபற்றி அலசுவோம்!



Saturday, January 29, 2011

புதுமடத்தை சுத்திபாக்கனும்மா?


                                               நம்மஊர் பஸ்தான் வரும் ஆனா (சிலசமயம்) வராது


Thursday, January 27, 2011

பொதுத்தேர்வு அட்டவணை

       தமிழகத்தில் +2 பொதுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி முதல் மார்ச் 25 -ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 11 வரை நடைபெறுகின்றது.இன்ஷா அல்லாஹ்
நமது சமுதாய மாணவ மாணவியர் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து குறைந்த பணத்தில் நல்ல கல்லூரியில் சேர்ந்து, நல்ல வேலையில் சேர அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.



Thursday, January 20, 2011

ஏகத்துவத்தை அளிக்க நினைக்கும் SDPI- யினர்

             
                                  தனக்கு இணை கற்பிக்க படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். குர் ஆன் 4:48சூரியனையும் ,காளையையும் அல்லாஹ்வுக்கு இணையாக
வணங்க சொல்லி வாழ்த்து தெரிவித்து

மூன்றாவது நோட்டீஸ் வெளீயிடு ..

Monday, January 10, 2011

”குர்-ஆன் ஹதீசுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை”


திருப்பூர் கோம்பைத் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் கடந்த 24-12-10 அன்று வெள்ளிக் கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் கோவை ரஹீம் அவர்கள் ஜும்மா உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ஆரம்ப காலத்தில் குர்ஆன் ஹதீஸைப் பேசிய பல அமைப்புகள் தற்போது தடம் புரண்டு சென்று கொண்டு இருப்பதையும், எப்படி எப்படியெல்லாம் அவர்கள் தடம் புரண்டு சென்று கொண்டு இருக்கின்றார்கள் என்ற விஷயங்களையும் ஆதாரப்பூர்வமாகப் பட்டியலிட்டார்.


Thursday, January 6, 2011

அநீதிக்கு மேல் அநீதி.. அநீதியைத் தட்டிக் கேட்க ஜனவரி 27ல் ஆர்த்தெழுவோம்!



அநீதியைத் தட்டிக் கேட்க ஜனவரி 27ல் சென்னையில் / மதுரையில் ஆர்த்தெழுவோம்.

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது முதல் அதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பாபர் மஸ்ஜிதை இடித்த பாவிகளை சட்டத் தின்படி தண்டிக்க வலியுறுத்தியும் நாம் உள்பட பல்வேறு இயக்கங்கள் டிசம்பர் ஆறாம் நாளில் போராட்டங்களை விடாமல் நடத்தி வந்தோம். நீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்கக் கோரி நாம் நடத்திய அனைத்து போராட்டங்களையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அர்த்தமற்றதாக்கி விட்டது.

சொத்துரிமைக்கும், மத உரிமைக்கும் விரோதமாக அமைந்த தீர்ப்பு உலக மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றமும் நியாயப் படுத்தப்பட்டு விட்டது. ஆரம்பம் முதலே அங்கே கோவில்தான் இருந்தது என்ற தவறான தீர்ப்பின் மூலம் பாபர் பள்ளிவாசலை யாரும் இடிக்கவில்லை என்ற தவறான நிலையை ஏற்படுத்தி விட்டது.

Wednesday, January 5, 2011

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி???



தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு,12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும்,அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான், நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து, நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிக்கும் அளவுகோலாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது...

பீடை நாள் இஸ்லாத்தில் உண்டா?

பீடை நாள் இஸ்லாத்தில் உண்டா?

இவ்வசனத்தில் (54:19) நஹ்ஸ் (பீடை) நாளில் ஆது' சமுதாயத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நல்ல நாட்கள், பீடை நாட்கள் மார்க்கத்தில் இருக்கிறது என்று சிலர் கூறி ஏமாற்றி வருகின்றனர்.


இவர்கள் நினைக்கின்ற கருத்தை இவ்வசனம் தரவில்லை.