இறைவனை சிந்திக்காதவர்கள்

இறைவனை சிந்திக்காதவர்கள் இன்னும் அவர்கள் (சிந்தித்து) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில்(பல்வேறு) விளக்கங்களைகூறியுள்ளோம். (அல்குர்ஆன் 17:41)

Tuesday, December 21, 2010

முஹர்ரம் பெயரில் மூட நம்பிக்கைககள் – இதை என்ன வென்று சொல்வது?

முஹர்ரம் பெயரில் நடத்தப்படும் இது போன்ற அனாச்சாரங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய கட்டாம் நம்மீது உள்ளது.




முஹர்ரம் பத்தும் முஸ்லிம்களின் மூடப் பழக்கங்களும்


இஸ்லாத்தில் போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்று. ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான முஹர்ரம் மாதத்திற்கு மெருகூட்டும் விதமாக அதன் பத்தாம் நாள் அமைந்திருக்கின்றது.

அழைப்புப்பணி வகுப்பு..!











திருச்சியில் வெள்ளிக் கிழமை. 17.12.2010
மாணவர்களுக்காக சிறப்பு வழி காட்டி முகாம் நடந்தது .

இதில் சகோதரர் . பக்கீர் முஹம்மது அல்தாபி . (TNTJ மாநில தலைவர் ) கலந்து கொண்டு சிரப்புரை ஆற்றினார்

இஸ்லாத்தை ஏற்றார் :




அதே வெள்ளி கிழமை ஜும்மா தொழுகை முடிந்த பிறகு ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர் . சுபாஸ் சந்திர போஸ் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் .இவருக்கு TNTJ மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி கலிமாவை சொல்லிக் கொடுத்தார் .அல்ஹம்துலில்லாஹ் .
இஸ்லாத்தை ஏற்ற இந்த சகோதரனுக்கு மறுமை வாழ்வு சிறப்பாக அமையவும் , கொள்கையில் உறுதியாக நிற்கவும் . அணைத்து சகோதரர்களும் துவா செய்யுங்கள் .
2. அதே கல்லூரியை சேர்ந்த கந்தவேலு என்ற சகோதரர் இஸ்லாத்தை முன்பே ஏற்று கொண்டாலும் . மக்கள் முன்பு தம்மை முஸ்லிம் என்று பிற கடனம் செய்தார்.
அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் .
Byதிருச்சியில் இருந்து அன்வர் அலி .அ

Friday, December 17, 2010

சத்திய முழக்கம் ....

மனிதன் படைக்கப்பட்ட நாளில் இருந்தே அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்திற்க்கும் நபிமார்களை அனுப்பி அந்த சமுதாய மக்களிடம் சத்திய இஸ்லாத்தை எடுத்துறைத்து வருகின்றான்.
ஒரு சில சமுதாய மக்கள் வழி தவறி வரம்பு மீறும் சமயத்தில் லூத்(அலை) சமுதாயத்தை அழித்தது போல சில சமுதாயத்தை அழித்தும் உள்ளான்.

ஆனால் இறுதி நபியான உத்தம நபி(ஸல்) அவர்களுக்கு இந்த சத்திய இஸ்லாத்தை பரிபூரணமாக்கி அவர்களோடு நிறுத்தி விடாமல் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் உயர்ந்த அழைப்புப் பணியை அவர்களின் சமுதாயமான நாம் அனைவரின் கையிலும் அளித்தூள்ளான். இதை தனது திருமறையிலே அல்லாஹ்...

நீங்கள் மனித குலத்துக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருகிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையை தடுகிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் ! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டு இருந்தால் அது அவர்களுக்கு சிறந்ததாக இருந்து இருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.
(அல்‍‍குர்ஆன் 3:110)

இந்த வசனத்தில் அல்லாஹ் நன்மையை ஏவி தீமையை தடுப்பதை அல்லாஹ் மீது நம்பிக்கை வைத்து ஈமான் கொள்வதன் ஒரு அங்கமாககுறிப்பிடுகின்றான் . இதில் இருந்து ஒவ்வொரு மூமீன் மீதும் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணி கடமையானது என்பதை நாம் உணர முடிகின்றது.

இந்த உயர்ந்த பணியை செய்வதன் மூலம் நாம் இவ்வுலகத்தில் சந்திக்குகும் பிரச்சனைகளையும் இதனால் மறுமையில் அல்லாஹ் நமக்கு தரும் கூலியை பற்றியும் நாம் அறிந்து கொள்ள கடமைபட்டுள்ளோம்.

நன்மையை ஏவி தீமையை தடுத்தல் :

நன்மையை ஏவி தீமையை தடுக்கும் இந்த உயரிய பணியை பொருத்த வரை நாம் செய்யும் அழைப்பு பணியினால் அனைவரும் சத்திய கொள்கையின் பக்கம் வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஒவ்வொரு பிரச்சாரர்களும் கலத்தில் இறங்கி இறை பணியை செய்வார்கள் ஆனால் மக்கள் மத்தியில் தங்கள் உன்மை பிரச்சாரம் சென்றடையாத பட்சத்திலும் மக்கள் சத்திய கொள்கையை எதிர்த்து அதனை ஏற்க்க மறுக்கும் சமயத்திலும் நம்மில் பலர் நமது பிரச்சாரத்தின் வீரியத்தை குறைத்துக் கொள்வதையும் அல்லது பிரச்சாரத்தில் இருந்து விலகி விடுவதையும் நாம் இன்றைய அன்றாட வாழ்க்கையில் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

இந்த நிலையை பற்றி அல்லாஹ் தனது திருமறையிலே கூறும் போது

அவர்களை நேர் வழியில் சேர்ப்பது உமது பொறுப்பில் இல்லை. மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகின்றான். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கபட மாட்டீர்கள்.

(அல்‍‍குர்ஆன் 2:272)

அவர்கள் உம்மிடம் விதன்டாவாதம் செய்வார்களானால் " என் முகத்தை அல்லாஹ்வுக்கே வழிபடச் செய்து விட்டேன். என்னை பின்பற்றியோரும் (இவ்வாறே செய்து விட்டனர்)" எனக் கூறுவிராக ! வேதம் கொடுக்கபட்டோரிடமும் எழுத படிக்க தெரியாதோரிடமும் "இஸ்லாத்தை ஏற்கிறீர்களா ?" என்று கேட்பிராக ! அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் நேர்வழி பெற்றனர். புறகணித்தால் எடுத்து சொல்வதே உமக்கு கடமை. அல்லாஹ் அடியார்களை பார்ப்பவன்.

(அல்‍‍குர்ஆன் 3:20)

அல்லாஹ்வுக்கு கட்டுபடுங்கள் ! இத்தூதருக்கும் (முஹ்மதுக்கும்) கட்டுபடுங்கள் ! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள் ! நீங்கள் புறகனித்தால் தெளிவாக எடுத்து சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள் !

(அல்‍‍குர்ஆன் 5:92)

எடுத்து சொல்வது தவிர இத்தூதர் மீது வேறு (பொறுப்பு) இல்லை. நீங்கள் வெளிபடுத்துவதையும் மறைப்பதையும் அல்லாஹ் அறிகிறான்.

(அல்‍‍குர்ஆன் 5:99)

அல்லாஹ் நாடி இருந்தால் அவர்கள் இணை கற்பித்திருக்க மாட்டார்கள். உம்மை அவர்களுக்குக் காவலர்களாக நாம் ஆக்கவில்லை. அவர்களுக்கு நீர் பொறுப்பாளரும் அல்லர்.

(அல்‍‍குர்ஆன் 6:107)

"மனிதர்களே ! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர் வழி நடப்பவர் தனக்காகவே நேர் வழி நடக்கிறார். வழி கெட்டவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்." என்று கூறுவிராக !

(அல்‍‍குர்ஆன் 10:108)

அவர்கள் நேர் வழி பெற வேண்டும் என்று நீர் பேராசை வைத்தால், அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டு விட்டானே அவருக்கு நேர் வழி காட்ட மாட்டான். அவர்களுக்கு உதவி செய்வோரும் இல்லை.

(அல்‍‍குர்ஆன் 16:37)

அவர்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்து சொல்வதே உமது கடமை.

(அல்‍‍குர்ஆன் 16:82)

என்ற பொருள் பட பல வசணங்களிலே மார்க்க பணியை கையில் எடுத்து அல்லாஹ்விற்க்காக செய்து வரும் பிரச்சாரர்களுக்கு அல்லாஹ் தெளிவாக கூறுகின்றான்.

நன்மையை ஏவி தீமையை தடுப்பதால் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் :

முஹ்மத் நபி(ஸல்) அவர்களும் இன்னும் அவர்களுக்கு முன்னால் வந்த பல நபிமார்களும் "இறைவன் ஒருவனே !" என்ற ஏகத்துவ கொள்கையை இறை மறுப்பாளர்கள் மத்தியில் எத்திவைத்த போது இறைமறுப்பாளர்களால் என்ன என்ன பிரச்சனைகளை சந்தித்ததாக அல்லாஹ் தனது திருமறையிலே கூறிகின்றானே அதே பிரச்சனைகளை 1980 களில் தர்கா, தாயத்து, கந்தூரி, மொளலீது தான் இஸ்லாம் என்று ஊரி கிடந்த தமிழகத்தில் இந்த ஏகத்துவ கொள்கையை உரக்க முழக்கமிட்ட நமது கொள்கை சகோதரர்கள் சந்தித்தனர்.

அந்த காலகட்டத்தில் மட்டும் இல்லை இன்றைக்கு கூட அது போன்ற பிரச்சனைகளை சந்திக்க தான் நேரிடும் சத்தியத்தை உரக்க கூறும் போது. உதாரணமாக எடுத்துக் கொண்டால் நாம் எடுத்து சொல்ல கூடிய சத்தியத்தை அசத்தியம் என்பார்கள் , ஊரை விட்டு வெளியேற்றுவதாக எச்சரிக்கை செய்வார்கள் ஏன் ஊரை விட்டு கூட ஒத்தி வைப்பார்கள், நம்மை தாக்கி நமது உறுப்புகளை சேதம் செய்வார்கள், நம்மை கேலி செய்வார்கள் , நம்மை பைத்தியம் என்பார்கள், நாம் சொல்வதும் செல்வதும் புது வழி என்பது போன்ற பல பிரச்சனைகளையும் சத்திய கொள்கையை எடுத்து சொல்லுபவர்கள் சத்திப்பார்கள்.

இதை தான் அல்லாஹ் தனது திருமறையிலே...

" நாங்கள் உம்மை பகிரங்கமான வழி கேட்டிலேயே காண்கின்றோம்" என அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் கூறினார்கள்.

(அல்குர்ஆன் 7:60)

" இவர்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றுங்கள் ! இவர்கள் சுத்தமான மனிதர்களாக உள்ளனர்" என்பதே அவரது சமுதாயத்தின் பதிலாக இருந்தது.

(அல்குர்ஆன் 7:82)

" உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன். பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்" (என்றும் கூறினான்)

(அல்குர்ஆன் 7:124)

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது " நம்பிக்கை கொண்டுள்ளோம்" என்று கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது " நாங்கள் உங்களை சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே" என கூறுகின்றனர்.

(அல்குர்ஆன் 2:14)

எந்தத் தூதர் அவர்களிடம் வந்தாலும், அவர்கள் கேலி செய்யாமல் இருந்தாதே இல்லை.

(அல்குர்ஆன் 15:11)

" அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரன் தான் " என்று அவர்கள் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன் 15:6)

" எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு விட்டு, அல்லாஹ்வை மட்டும் நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்க்காக எங்களிடம் நீர் வந்திருக்கிறீரா ? நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு நீர் எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்" என்று அவர்கள் கூறினார்கள்.

(அல்குர்ஆன் 7:70)

(முஹ்மதே!) உம்மை அவர்கள் பெய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பெய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும் கொண்டு வந்தனர்.

(அல்குர்ஆன் 3:184)

இதை எல்லாம் கண்டு துவண்டு நமது அழைப்பு பணியை கைவிட்டால் மறுமையில் அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் கூலியை இழந்தவர்களாக நாம் ஆகி விடுவோம். இதற்க்கு எல்லாம் அஞ்சாமல் கொள்கை உறுதியோடு நமது பிரச்சாரத்தை எடுத்து சென்றோம் என்றால் அதற்க்கான பலன்களை அல்லாஹ் நமக்கு மறுமையில் தருவான் என்பதை நம் மனதில் கொண்டு அசத்தியவாதிகளின் எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் அஞ்சி நமது அழைப்பு பணியை சீர்மையுடன் கொண்டு செல்ல வேண்டும்.

நன்மையை ஏவி தீமையை தடுபதால் கிடைக்கும் பலன்கள் :

தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்ப்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதை தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுகளில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம்.

(அல்குர்ஆன் 4:114)

நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நன்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையை தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுபடுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புறிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன் 9:71)

(அவர்கள்) மன்னிப்புத் தேடுபவர்கள்; வணங்குபவர்கள்; (இறைவனைப்) புகழ்பவர்கள்; நோன்பு நோற்பவர்கள்; ருகூவு செய்பவர்கள்; ஸஜ்தாச் செய்பவர்கள்; நன்மையை ஏவுபவர்கள்; தீமையைத் தடுபவர்கள்; அல்லாஹ்வின் வரம்புகளை பேணிக் கொள்பவர்கள். (இத்தகைய) நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

(அல்குர்ஆன் 9:112)

எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைத்தாரோ, நற்செயல் புரிந்தாரோ, மேலும் நான் முஸ்லீம் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்படிந்தவன்) என்று கூறினாரோ, அவரை விட அழகிய வார்த்தை கூறுபவர் யார் இருக்கிறார் ?

(அல்குர்ஆன் 41:33)

இப்படி தனது திருமறையிலே அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடி நன்மையை ஏவி தீமையை தடுக்கும் உயர்ந்த பணியில் இருக்கும் மக்களுக்கு இன்மையிலும் மறுமையிலும் நற்செய்தியும் நற்கூலியும் கிடைக்கும் என்பதை வல்ல நாயன் நமக்கு தெளிவுபடுத்துகின்றான்.

நன்மையை மட்டும் ஏவி தீமையை தடுக்காமல் விடலாமா ?

நம்மில் சிலர் இந்த நிலைபாட்டில் இருகின்றோன் தீமையை தடுபதினால் தானே பல பிரச்சனைகளை நாம் சந்திக்கின்றோம் அதனால் தீமையை தடுக்காமல் நன்மையை மட்டும் ஏவி வரலாம் என்ற நிலைபாடு தான் அது. அல்லது வேறு சிலரோ தீமையை தடுபதினால் நம் சமுதாயத்திற்க்கு மத்தியில் பிளவு ஏற்படுகின்றதே என்று தீமையை தடுக்காமல் இருந்து வருவதை இன்றைக்கு நாம் அனைவராலும் காண முடிகின்றது.

இந்த நிலைபாட்டை திருக்குர்ஆன் தவறு என்று ஆணித்தனமாக கூறுகின்றது

கடல் ஓரத்தில் இருந்த ஊரை பற்றி அவர்களிடம் கேட்பீராக ! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களை சோதித்தோம்.

"அல்லாஹ் அழிக்க போகின்ற அல்லது கடுமையாக தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்க்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்? " என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் " உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்க்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்க்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகின்றோம்)" எனக் கூறினர்.

கூறப்பட்ட அறிவுறையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தவர்களை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தவர்களை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாக தண்டித்தோம்.

தடுக்கபட்டதை அவர்கள் மீறிய போது "இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள் !" என்று அவர்களுக்கு கூறினோம்.

(அல்குர்ஆன் 7:163 - 166)

இந்த வசணங்களில் அல்லாஹ் கடல் ஓரத்தில் வாழ்ந்த ஒரு சமுதாயத்தை பற்றி நமக்கு கூறுகின்றான்.

அந்த சமுதாயத்திற்க்கு சனிகிழமைகளில் மீன் பிடிக்க இறைவன் தடை செய்து அவர்களை சோதிப்பதற்க்காக சனிகிழமைகளில் மீன்களை அதிகமாக வர வைக்கின்றான்.

இதனை பார்த்த அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட ஒரு கூட்டத்தார் அல்லாஹ்வின் கட்டளையை மீறி சனிகிழமையில் மீன் பிடிக்க சென்றனர்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட இன்னொரு கூட்டம் அவர்கள் சொல்வதை பார்த்து அல்லாஹ் கூறிய நன்மையை ஏவி தீமையை தடுக்கும் உயர்ந்த பணியை செய்ய நாடி அல்லாஹ்வின் கட்டளைகளை கூறி அவர்களை தடுக்கின்றது.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட மற்றும் ஒரு கூட்டத்தார் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் கூட்டத்தாரை பார்த்து அல்லாஹ் அழிக்க போகின்ற அல்லது கடுமையாக தண்டிக்க போகின்ற கூட்டத்தாருக்கு ஏன் அறிவுரை கூறுகின்றீர்கள் விட்டு விடுங்கள் என்று அந்த கூட்டம் கூறுகையில் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் உயர்ந்த பணியை செய்த கூட்டத்தார் அவர்களை நோக்கி உங்கள் இறைவனின் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்க்காகவும் மற்றும் வரம்பு மீறும் இவர்களும் இறைவனை அஞ்சுவோராக ஆவதற்க்கும் தான் அறிவுரை கூறுகின்றோம் எனக் கூறினர்.

இந்த மூன்று கூட்டத்தாரை பற்றி அல்லாஹ் கூறுகையில் தீமையை தடுத்தவர்களை மட்டும் காப்பாற்றினோம் எஞ்சிய 2 கூட்டத்தாரை குரங்குகளாக மாற கட்டளையிட்டோம் என்று கூறுகின்றான்.

இந்த சம்பவத்தை வைத்து பார்க்கும் போது நன்மையை மட்டும் ஏவி தீமையை தடுக்காமல் இருப்பதும் அல்லது நன்மையை ஏவமலும் தீமையை தடுக்காமலும் இருபதும் தண்டனைக்கு உறியதே என்பதை நம்மால் அறிய முடிகின்றது.

விமர்சணத்திற்க்கு அஞ்சி மார்க்கத்தை வளைத்து கொடுக்கலாம?

இன்றைக்கு மார்க்கத்தை எடுத்து கூறும் பலர் ஒரு சில மார்க்க விஷயங்களை வெளிபடையாகவும் உறுதியாகவும் கூறுவதால் நமது சமுதாயத்திற்க்கு மத்தியில் ஒற்றுமை நீங்கி பிளவு ஏற்படுகின்றது என்று நினைத்துக் கொண்டும் மார்க்கத்தை வளைத்து தனக்கு சாதகமான விஷயங்களை மட்டும் பேசிக் கொண்டு இருப்பதை நாம்மால் கண்கூடாக பார்க்க முடிகின்றது.

மற்றும் சிலர் நம் இந்த மார்க்க விஷயத்தை மக்கள் மத்தியில் கூறினால் விமர்சணத்திற்க்கு ஆளாவோமோ அல்லது மக்கள் நம் மீது அதிருப்தி கொள்வார்களோ என்ற நினைப்பில் சிலவற்றை கூறாமல் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு இருக்க கூடாது என்று அல்லாஹ் தெளிவாக தனது திருமறையிலே குறிப்பிட்டுள்ளான்.

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மை குழப்புவார்கள் என்பதில் கவணமாக இருப்பீராக ! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகின்றான் என்பதை அறிந்து கொள்வீராக ! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர்

(அல்குர்ஆன் 5:49)

" இவருக்கு ஒரு புதையல் அருளபட வேண்டாமா ? அல்லதி இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா ?" என்று அவர்கள் கூறுவதால் (முஹ்ம்மதே!) உமக்கு அறிவிக்கப்படும் செய்தியில் சிலவற்றை நீர் விட்டு விடக் கூடும். உமது உள்ளம் சங்கடபடக் கூடும். நீர் எச்சரிப்பவரே அல்லாஹ் எல்லாப் பொருளுக்கும் பொறுப்பாளன்.

(அல்குர்ஆன் 11:12)

உமக்கு கட்டளையிடபட்டதை தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணைக் கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!

(அல்குர்ஆன் 15:94)

இந்த வசனங்கள் அனைத்திலும் மக்கள் இப்படி கூறுகிறார்கள் அப்படி கூறுகிறார்கள் என்பதற்க்காக அல்லாஹ் அருளிய தூய இஸ்லாத்தை நாம் வளைத்து கொடுக்க கூடாது என்றும் நமக்கு வழங்கப்பட்ட வேதத்தை தயவு தாட்சண்யமின்றி எடுத்துறைக்க வேண்டும் என்றும் அல்லாஹ் நாம் அனைவருக்கும் கட்டளையிட்டுள்ளான்.

விமர்சனங்களுக்கு கலங்க கூடாது :

நன்மையை ஏவி தீமையை தடுக்கும் பணியில் ஈடுபடும் போது நாம் யாருடைய தீய செயல்களை சுட்டி காட்டி தடுக்க நினைகின்றோமோ அவர்களாலும் அவர்களை சார்ந்தவர்களாலும் மிகுந்த விமர்சணத்திற்க்கு ஆளாக நேரிடும். இதை எல்லாம் கண்டு நமது மனதில் கலக்கம் ஏற்ப்பட்டு விட கூடாது என்பதற்க்காக அல்லாஹ் தனது திருமறையிலே நமக்கு பல இடங்களில் அறிவுரை கூறியுள்ளான்.

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்ப்பட்டது போல் உங்களுக்கும் ஏற்ப்படாமல் சொர்கத்தில் நிழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா ? அவர்களுக்கு வறுமையும் துன்பமும் ஏற்பட்டன. "அல்லாஹ்வின் உதவி எப்போது " என்று (இறைத்) தூதரும் அவருடன் இருந்த நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.

(அல்குர்ஆன் 2:214)

உங்களுக்கு நன்மை ஏற்ப்பட்டால் அது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தீங்கு ஏற்ப்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்த தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவன்.

(அல்குர்ஆன் 3:120)

எத்தனையோ நபிமார்களுடன் சேர்ந்து எவ்வளவோ படையினர் போரிட்டுள்ளனர். அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்ப்பட்ட (துன்பத்)திற்க்காக அவர்கள் தளர்ந்து விடவில்லை; பலவீனபடவும் இல்லை; பணிந்துவிடவும் இல்லை. சகித்து கொள்வோரை அல்லாஹ் விரும்புகின்றான்.

(அல்குர்ஆன் 3:186)

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறிவிட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தை கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிபோரின் பழி சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன் 5:54)

அறிவீனர்களை அலட்சியம் செய்தல்:

இந்த தூய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து நன்மையை ஏவி தீமையை தடுக்கும் தருனத்தில் ஒரு சில அறிவீனர்கள் நமது செயல்பாட்டை குறைக்கும் நோக்கத்தில் நம்மை பற்றியும் நமது செயல்பாடுகள் பற்றியும் அவதூறுகள் பரப்பி நமது செயல்பாடுகளை முடக்க நினைப்பார்கள் அல்லது ஒரு சில அறியாமை வாதத்தை முன்வைத்து நம்மை குழப்ப நினைப்பார்கள் இது போன்ற அறிவீனர்களை புறகணித்து அலட்சியம் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு அறிவுறுத்தியுள்ளான்.

பெருந்தன்மையை மேற்கொள்வீராக ! நன்மையை ஏவுவீராக ! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக !

(அல்குர்ஆன் 7:199)

இந்த வசனம் மட்டும் இல்லாமல் 25:63 வது வசனத்திலும் 28:55 வது வசனத்திலும் இதே அறிவுரையை அல்லாஹ் நமக்கு கூறியுள்ளான்.

பென்கள் மீதும் கடமை :

அல்லாஹ் கூறும் இந்த நன்மையை ஏவி தீமையை தடுக்கும் அழைப்பு பணி ஆண்கள் மீது மட்டும் கடமை என்று பல பெண்கள் தங்களின் குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்களின் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொண்டு இஸ்லாம் கூறும் இந்த அழைப்பு பணியை மறந்த நிலையில் இருக்கின்றனர். ஆனால் அல்லாஹ் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் அழைப்பு பணியை பெண்கள் மீதும் கட்டாய கடமை என்று தனது திருமறையிலே வலியுறித்தியுள்ளான்.

நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நன்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன் 9:71)

சகோதரிகள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் நாம் அன்றாடம் வீட்டு வேலைகளிலும் நமது சுய தேவைகளையும் மட்டும் கவணித்து வருகின்றோம் ஆனால் அல்லாஹ் நம்பிக்கை கொண்ட பெண்கள் மீதும் நன்மையை ஏவி தீமையை தடுப்பது, தொழுகையை நிலை நாட்டுவது, ஸகாத் கொடுப்பது மற்றும் அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்படுவது அனைத்தும் கடமை என்று நமக்கு கட்டளையிடுள்ளான். சகோதரிகளே உங்களில் எத்தனை பென்கள் இதனை செய்கின்றீர்கள் சற்று சிந்தித்து பாருங்கள்.

உங்கள் சிந்தனைக்கு:

அன்பு சகோதர சகோதரிகளே சற்று சிந்தித்து பாருங்கள் இனையற்ற கிருபையுடைய அல்லாஹ்வின் தோழன் என்று அழைக்கப்பட்ட நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் தந்தைக்கும் நபி நூஹ்(அலை) அவர்களின் மனைவி மற்றும் மகனுக்கும் நபி லூத்(அலை) அவர்களின் மனைவிக்கும் கிடைக்காத இஸ்லாம் என்ற சத்திய கொள்கையை ஏற்க்கும் அற்புத பாக்கியம் நாம் அனைவருக்கும் கிடைத்துள்ளது.

ஒரு பார்வை இல்லாத முதியவர் நடந்து செல்லும் வழியில் பாதாள சக்கடை ஒன்று திறந்து கிடக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். ஒரு பத்து அடி எடுத்து வைத்தால் அவர் அந்த பாதாள சக்கடையில் விழுந்து ஒரு பெரிய ஆபத்தை சந்திப்பார் என்றால் நாம் யாரும் அதனை பார்த்து கொண்டு இருக்க மாட்டோம் எப்படியாவது அந்த ஆபத்தை தடுத்து நிறுத்த தான் முற்ப்படுவோம். ஆனால் இன்று நமது உற்றார் உறவினர்களிலும் சரி நன்பர்கள் வட்டாரத்திலும் சரி தெளிவான வழிகேட்டில் இருப்பவர்களை நாம் யாரும் அதனை தடுப்பதில்லை மாறாக நமது வழியில் நாம் சென்றுக் கொண்டு இருக்கின்றோம். சற்று சிந்தித்து பாருங்கள் வயதான அந்த முதியவர் எப்படி ஒரு பெரிய ஆபத்தை சந்திக்க உள்ளாரோ அதே போல் உங்கள் உற்றார் உறவினர்களிலும் நன்பர்களும் அவர்கள் பின்பற்றும் வழிகேடான கொள்கையின் காரணமாக மறுமை நாளில் நரக நெருப்பின் பெரும் ஆபத்திற்க்கு ஆளாக உள்ளனர். அவர்களிடம் நன்மையை ஏவி அவர்கள் செய்யும் தீமையை தடுத்து அவர்களையும் முஹ்மத் நபி(ஸல்) அவர்கள் வாயிலாக அல்லாஹ் பரிபுரணபடுத்திய கொள்கையின் பக்கம் அழைப்பது நம் மீது கடமை அல்லவா.

நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்க்கு முன் மக்கள் மத்தியில் கூறிய செய்தியை பாருங்கள்...

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்; என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் சரி அதை (பிறருக்கு) எடுத்துரையுங்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல் : புகாரி (3461)

இன்று நாம் உத்தம நபி(ஸல்) அவர்களை பற்றி பல செய்திகளை அறிந்தவர்களாக இருக்கின்றோம் ஆனால் அதனை நபி(ஸல்) வழியுறுத்திய அவர்களை பற்றிய செய்தியை பிறருக்கு எடுத்துரைக்கும் கட்டளையை இன்று புறக்கணித்தவராக வாழ்ந்து வருகின்றோம்.

ஆனால் மக்களை நேர் வழிபடுத்துவதன் மூலம் அதனை பின்பற்றுவதன் கூலி கிடைக்கும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளனர்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்; யார் (மக்களை) நேரான வழியின் பால் அழைக்கிறாரோ அவருக்கு அதைப் பின்பற்றுபவரின் கூலிகளைப் போன்ற கூலி கிடைக்கும். இவ்வாறு கொடுப்பது அதை செய்தவர்களின் கூலியிலிருந்து கொஞ்சம் கூட குறைந்து விடாது.

அறிவிப்பவர் : அபுஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (4831)

எனவே இன்மையிலும் மறுமையிலும் நமக்கு வெற்றியை தேடித் தரும் உயர்ந்த பணியான நன்மையை ஏவி தீமையை தடுக்கும் அழைப்பு பணியை செய்து அல்லாஹ் கூறும் வெற்றியாளர்களாக அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புறிவானாக. இன்ஷா அல்லாஹ்