இறைவனை சிந்திக்காதவர்கள்

இறைவனை சிந்திக்காதவர்கள் இன்னும் அவர்கள் (சிந்தித்து) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில்(பல்வேறு) விளக்கங்களைகூறியுள்ளோம். (அல்குர்ஆன் 17:41)

Monday, February 28, 2011

அல்லாஹ் உருவமற்றவனா?


                                              -ஓர் ஆய்வு

 

       தொடர் - 2:

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....


இறைவனுக்கு இரு கைகள்:

எல்லாம் வல்ல அல்லாஹ் தனக்கு இரு கைகள் இருப்பதைத் திருக்குர்ஆனில் தெரிவிக்கிறான்.
"எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' என்று (இறைவன்) கேட்டான்.
அல்குர்ஆன் 38:75


அல்லாஹ்வுக்குக் கைகள் இருப்பதைத் தெரிவிக்கும் வசனமாகும். இப்போது இது குறித்த ஹதீஸ்களைப் பார்ப்போம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் மறுமை நாüல் மக்கüன் தலைவன் ஆவேன். (மறுமை நாüல்) அல்லாஹ் (மக்கüல்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெüயில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்பவர் அந்த மக்களைப் பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியேற்பார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி), "நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்) பார்க்க மாட்டீர்களா?'' என்று கேட்பார்கள். மக்கள் சிலர், "உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)'' என்று கூறுவார்கள்.
ஆகவே, மக்கள் ஆதம் (அலை) அவர்கüடம் சென்று, "ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும் படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். உங்களைச் சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்கவில்லையா?'' என்று கேட்பார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3340
இது ஆதம் நபியிடம் மக்கள் கூறுகின்ற கருத்தாகும். இதில், அல்லாஹ் தன் கையால் உங்களைப் படைத்தான் என்று மக்கள் கூறுவதிலிருந்து இறைவனுக்குக் கைகள் இருப்பதை அறிய முடியும்.

Monday, February 21, 2011

அல்லாஹ் உருவமற்றவனா?

                                              -ஓர் ஆய்வு

 

       தொடர் 1: 

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்;
உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்.
இது நாகூர் ஹனீபாவின் பாடல் வரிகள். இந்தப் பாடல் வரிகள் தமிழக முஸ்லிம்களின் கடவுள் கொள்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது. தமிழகத்திலுள்ள முஸ்லிம்கள், "அல்லாஹ்வுக்கு உருவமில்லை' என்ற நம்பிக்கையில் ஆழ்ந்த பிடிமானம் கொண்டிருக்கிறார்கள்.
அரபி மதரஸாக்களில் படிக்கின்ற ஆலிம்களிடமும் இந்தச் சிந்தனையில் எந்த மாற்றமும் இல்லை. அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்று இந்த ஆலிம்களும் முடிவெடுத்து அதில் தீர்மானமாக இருப்பதால், "அல்லாஹ்வுக்கு உருவமிருக்கின்றது' என்பதற்குக் குர்ஆன் ஹதீஸில் இருக்கும் தெளிவான ஆதாரங்கள் இந்த ஆலிம்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
அல்லாஹ்வின் கிருபையால் தமிழகத்தில் எண்பதுகளின் துவக்கத்திலிருந்து, தவ்ஹீது பிரச்சாரம் தலைகாட்டத் துவங்கிய மாத்திரத்தில் மக்கள் திருக்குர்ஆனின் தமிழாக்கங்களை அதிகமதிகம் படிக்கத் துவங்கினர். இந்தத் தமிழாக்கங்கள் மக்களிடம் மாபெரும் தாக்கத்தையும் தூய இஸ்லாத்தை அறிய வேண்டும் என்ற தாகத்தையும் அதிகரித்தது.
உண்மையான கடவுள் கொள்கையை அவர்கள் அறியத் தலைப்பட்டனர். அல்லாஹ்வுக்கு உருவமிருக்கின்றது என்ற விளக்கம் அந்த உண்மையான கடவுள் கொள்கையில் உள்ளது தான் என்பதை அவர்கள் நன்கு விளங்கிக் கொண்டனர். அல்லாஹ் அரூபி, உருவமற்றவன் என்ற அசத்திய நம்பிக்கையிலிருந்து அவர்கள் விடுபட்டனர்; வெளியேறினர்.
ஆனால் இந்த பரேலவிஸ ஆலிம்கள் மட்டும் இந்தச் சிந்தனைக்கு வரவில்லை. இது வரை வர மறுத்துக் கொண்டிருக்கின்றனர். அசைந்து கொடுப்பதாக இல்லை.
அண்மையில் சென்னையில் இந்த பரேலவிஸக் கொள்கைவாதியான அப்துல்லாஹ் ஜமாலி என்பவருடன் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் இது தொடர்பாக விவாதம் நடந்தது.
இதில் தவ்ஹீத் அணி சார்பில் பி.ஜே., "இறைவனுக்கு உருவமுண்டு' என்ற தலைப்பில் வாதம் புரிந்தார். அல்குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரங்களை அள்ளி, அள்ளிப் போட்டார்.

Saturday, February 12, 2011

மவ்லீது ஓதும் இமாம் இணைகர்பிப்பவர் ஆவாரா.?




                                                                       (வீடியோ)

Tuesday, February 8, 2011

ஒற்றுமை கோசமும்.! ஓரிறைக் கொள்கையும் .!

 

                                                                 பாகம்-1
 






Monday, February 7, 2011

இணை வைத்தல்


  அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை. எதுவும் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
பல கடவுள்கள் இருப்பதாக நம்புவதும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வுடைய பண்புகள், ஆற்றல்கள் அவனுக்கு இருப்பது போல் மற்றவர்களுக்கு இருப்பதாக நம்புவதும் அல்லாஹ்வுக்குச் செய்யும் வழிபாடுகளில் எந்த ஒன்றையும் மற்றவர்களுக்குச் செய்வதும் இணை கற்பித்தல் ஆகும்.



இறைவனுக்கு உருவம் உண்டா?

         
                 இந்த தலைப்பின் கீழ் பல் வேறு குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் டிகொடுத்திருக்கிறோம். யாருடைய விளக்கமும் தேவைப்படாத அளவுக்கு இந்த செய்திகள் அமைந்துள்ளன. எனவே மொழிபெயர்ப்பை மட்டும் கொடுத்திருக்கிறோம்.



Wednesday, February 2, 2011

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக! அவர்களே வெளியிட்ட ஆதாரத்தோடு!



தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான மவ்லித் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி மக்களை சிந்திக்க வைத்துள்ளோம்.


மவ்லித் என்பது நபிகளார் காலத்தில் இருந்ததில்லை என்பதையும் அவை மூடநம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் உலக நோக்கத்திற்காகவும் தொகுப்பப்பட்டதுதான் என்பதை மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் மவ்லவி தேங்கை சர்புத்தீன் என்பவர் எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியுள்ளோம் வாசகர்கள் கவனத்தில் கொள்க!

மாபெரும் இணைவைப்பு மவ்லீத் ஓதுதல்..






1.  மவ்லித் வரிகள்

اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ        اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ

பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் !
கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !

اَنْتَ غَفَّارُ الْخَطَايَا           وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ

இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,
அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ

كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ    وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!
சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!